உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும்; அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி + "||" + India, China among 8 countries allowed to buy Iranian oil: Pompeo

ஈரானுக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும்; அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி

ஈரானுக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும்; அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி
ஈரானுக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த மே மாதத்திற்கு பின், அணு ஆயுத திட்டத்தினை கைவிடாத ஈரான் நாடு மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என கூறினார்.  அந்நாட்டுடன் தொடர்பு வைத்து கொள்ளும் நாடுகளுக்கும் எச்சரிக்கை விடப்பட்டது.

ஈரான் நாடு இவற்றை புறந்தள்ளியதுடன், அணு ஆயுத திட்டம் அமைதி நோக்கத்திற்கானது என தொடர்ந்து கூறி வந்தது.

இந்த நிலையில், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார தடையை அமல்படுத்தியுள்ளது. இந்த பொருளாதார தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஈரானின் எண்ணைய் மற்றும் நிதித்துறையை கடுமையாக பாதிக்கும் தடையாக இந்த பொருளாதார தடை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அமெரிக்காவின் சட்டவிரோத மற்றும் நியாயமற்ற பொருளாதார தடைகளை நாங்கள் பெருமையுடன் புறக்கணித்துச்செல்வோம். ஏனெனில், இது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்று ஈரான் அதிபர் ரவுகானி தொலைக்காட்சி உரையில் கூறினார்.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகள் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.  தொடர்ந்து ஈரானுக்கு எதிராக கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் என கூறினார்.

இந்த பட்டியலில் இத்தாலி, கிரீஸ், தென்கொரியா, தைவான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளும் உள்ளன.

ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதனை இந்தியா நவம்பர் 4ந்தேதிக்குள் முழுவதும் நிறுத்திவிட வேண்டும் என அமெரிக்கா முன்பு தெரிவித்து இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரான் அணு ஆயுதங்கள் ஏந்தியிருப்பது உலகிற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்- அமெரிக்கா
யுரேனியம் செறிவூட்டலை அதிகரித்து, அணுசக்தி ஒப்பந்தத்தை மீறியதற்கு, ஈரான் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ எச்சரித்துள்ளார்.
2. ஈரான் யுரேனிய மிரட்டல்: கவனமாக இருங்கள் -உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஈரானின் யுரேனிய மிரட்டல் குறித்து கவனமாக இருங்கள் என்று உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3. அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ அலுவலகத்துக்கு வந்த பார்சலில் ‘நச்சு’
அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ அலுவலகத்துக்கு வந்த பார்சலில் ‘நச்சு’ பொருள் இருந்துள்ளது.
4. ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வருமா? அமெரிக்கா-தலீபான்கள் சமரச பேச்சு கத்தாரில் தொடங்கியது
கத்தார் நாட்டில் அமெரிக்காவுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான சமரச பேச்சு தொடங்கியது. இதில் திருப்பம் ஏற்படுமா, ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
5. வர்த்தக பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர டிரம்ப்- ஜி ஜிங்பிங் ஒப்புதல்
வர்த்தக பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.