உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 16 Dec 2018 10:15 PM GMT (Updated: 16 Dec 2018 8:33 PM GMT)

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது

* அமெரிக்காவில் அகதிகள் மையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த கவுதமலா நாட்டை சேர்ந்த 7 வயது சிறுமி ஜாக்கலின் மரணத்துக்கு அமெரிக்க அதிகாரிகள் தான் காரணம் என மெக்சிகோவை சேர்ந்த அகதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சிறுமியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* ரஷிய நகரங்களில் நடந்த தீ விபத்துகளில் 6 குழந்தைகள், 4 பெரியவர்கள் என 10 பேர் உயிரிழந்தனர்.

* அமெரிக்க உள்துறை மந்திரி ரியான் ஜிங்கே, சொந்த லாபத்துக்காக தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை அவர் மறுக்கிறார்.

* ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில் அகதிகள் விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை கண்டித்து தலைநகர் வியன்னாவில் அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது. இதில் சுமார் 17 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

* சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தெரியவில்லை.

* இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் உள்ள சோபுட்டான் என்கிற எரிமலையில் அடுத்தடுத்து 2 முறை வெடிப்பு ஏற்பட்டது. அந்த எரிமலை 7½ கி.மீ உயரத்துக்கு சாம்பலை உமிழ்கிறது.

* லிபியாவின் உள்துறை அமைச்சகத்தில் மூத்த பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும் சலா மார்க்கனி என்பவர் வீட்டில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த அதிகாரியின் மனைவி பலி ஆனார். இந்த தாக்குதலை ஐ.நா. வன்மையாக கண்டித்தது.

*ஏமனில் சண்டை நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோதும், ஹொதய்தா நகரில் வான்தாக்குதல்கள், மோதல்கள் நடைபெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

* ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் விவகாரத்தில் இங்கிலாந்தில் மீண்டும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டோனி பிளேர் அழைப்பு விடுத்தார். இதற்கு பிரதமர் தெரசா மே கண்டனம் தெரிவித்துள்ளார்.


Next Story