உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
ரஷியாவில் நிலக்கரி சுரங்க பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ், விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர்.

* அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக போர் அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த காலக்கெடு முடியும் வரை சீன அதிபர் ஜின் பிங்கை சந்தித்து பேச வாய்ப்பு இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.

* வருகிற ஏப்ரல் மாத இறுதியில் சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக திரும்பப்பெறப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

* ரஷியாவில் நிலக்கரி சுரங்க பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ், விபத்துக்குள்ளானதில் 6 பேர் பலியாகினர். 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

* ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் லாம்பிரஜெட் என்ற இடத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி பலியாகினர்.

* பிரேசிலின் மினாஸ் கெராயிஸ் மாகாணத்தில், புருமாதின்ஹோ நகரில் அணை உடைந்து ஊருக்குள் சேறு புகுந்தது. இதில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்தது.

* அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ பெல்ஜியம், போலந்து உள்பட 5 ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷியா முதல் முறையாக அனுப்பியது சர்வதேச விண்வெளி மையத்துக்கு புறப்பட்ட ‘ரோபோ’
ரஷியாவை சேர்ந்த புகழ்பெற்ற விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சிக்காக மனித வடிவிலான ‘ரோபோ’ ஒன்றை தயாரித்து உள்ளது.
2. ரஷிய ராணுவ முகாமில் ராக்கெட் பரிசோதனை செய்த போது வெடிவிபத்து இருவர் உயிரிழப்பு
ரஷியாவில் ராணுவ முகாமில் ராக்கெட்டை பரிசோதனை செய்த போது வெடிவிபத்து நேரிட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
3. ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழப்பு
ரஷியாவில் மின் கசிவால் 3 அணு உலைகள் செயலிழந்தன.
4. ரஷியாவில் சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு
ரஷியாவில் சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு ஏற்பட்டது.
5. ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரம் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் அமெரிக்காவிற்கு இந்தியா பதில்
ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரத்தில் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் என அமெரிக்காவிற்கு இந்தியா பதிலை கொடுத்துள்ளது.