மசூத் அசார் விவகாரம்: பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் -சீனா சொல்கிறது


மசூத் அசார் விவகாரம்: பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் -சீனா சொல்கிறது
x
தினத்தந்தி 12 March 2019 2:38 AM GMT (Updated: 12 March 2019 2:38 AM GMT)

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என சீனா தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்,

ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில், பேச்சுவார்த்தைகளின் மூலமே ஆக்கப்பூர்வமான தீர்வை எட்ட முடியும் என்று சீனா தெரிவித்தது.

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரும் தீர்மானத்தை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதன்கிழமை (மார்ச் 13) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், மேற்கண்ட கருத்தை சீனா தெரிவித்துள்ளது.

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஏற்கெனவே மூன்று முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், சீனாவின் முட்டுக்கட்டையால், அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீதான நிலைப்பாட்டை சீனா இன்னும் அறிவிக்கவில்லை.

Next Story