உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
ஈராக்கின் தியாலா மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தினர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.

* சூடானில் உடனடியாக மக்களாட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நீடிக்கிறது. இதற்கிடையில் அங்கு முந்தைய அரசின் கீழ் பணியாற்றிய மூத்த அரசு அதிகாரிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

* ஈராக்கின் தியாலா மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தினர் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். அமெரிக்க கூட்டுப்படைகளின் ஆதரவோடு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர் முகமது சல்மான் தாவுத் உள்பட 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி டிரம்பின் தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 3 மாதங்களில் மட்டும் 30 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.208 கோடியே 20 லட்சத்து 75 ஆயிரம்) வசூலாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* பின்லாந்து நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இடதுசாரி கட்சியான சமூக ஜனநாயக கட்சி நூலிழையில் வெற்றிபெற்றது.

* ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் திருமணம் குறித்த பேச்சுவார்த்தையின் போது இருதரப்பினர் இடையே மோதல் வெடித்தது. ஒருவரை ஒருவர் கடுமையான ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இதில் 3 பேர் பலியாகினர். 13 பேர் படுகாயம் அடைந்தனர்.தொடர்புடைய செய்திகள்

1. ஈராக்கில் வான்தாக்குதலில் 6 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
ஈராக்கில் நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 6 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலியாகினர்.
2. ஈராக்கில் சிக்கி தவித்த பஞ்சாப் தொழிலாளர்கள் 7 பேர் நாடு திரும்பினர்
ஈராக்கில் சிக்கி தவித்த பஞ்சாப் தொழிலாளர்கள் 7 பேர் நாடு திரும்பினர்.
3. ஈராக்கில் துருக்கி துணை தூதர் உள்பட 3 அதிகாரிகள் சுட்டுக்கொலை
ஈராக்கில் துருக்கி துணை தூதர் உள்பட 3 அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4. உலகைச் சுற்றி...
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஒரு மசூதி அருகே அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தது.
5. உலகைச் சுற்றி...
ஈராக்கின் கிர்குக் மாகாணத்தில் ஒரு கார் மற்றும் மினிபஸ்சில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறின.