உலக செய்திகள்

கனடாவில் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 3 பேர் பலி + "||" + 3 soldiers killed in avalanche in Canada stuck trek

கனடாவில் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 3 பேர் பலி

கனடாவில் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 3 பேர் பலி
கனடாவில் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வீரர்கள் 3 பேர் பலியாகினர்.
ஒட்டாவா,

கனடாவின் அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களுக்கு இடையே ஹவ்ஸ் பீக் என்கிற மலை உள்ளது. இது அந்நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றாகும்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் லாமா, ஹான்ஸ்ஜோர்க் ஆயுர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஜெஸ் ரோஸ்கெல்லி ஆகிய 3 மலையேற்ற வீரர்கள் ஹவ்ஸ் பீக் மலையில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர்.


அவர்கள் 3 பேரும் மலையின் மத்திய பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு திடீர் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய 3 பேரும் பனியில் புதைந்து பலியாகினர்.

மோசமான வானிலை நிலவுவதை அறியாமல் தவறான நேரத்தில் அவர்கள் மலையேறும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் மூலம் அவர்களின் உடல்களை மீட்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குகிறார் கனடா பிரதமர்
கனடா நாட்டில் நடைபெற இருக்கும் தேர்தலுக்கான பிரச்சாரத்தை கனடா பிரதமர் இன்று தொடங்கினார்.
2. கனடாவை தாக்கியது ‘டோரியன்’ புயல்: 4.5 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின
கனடாவை டோரியன் புயல் தாக்கியது. இதனால் அங்குள்ள 4.5 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின.
3. நந்தா தேவி சிகரத்தில் மாயமான 5 மலையேற்ற வீரர்களின் சடலம் கண்டுபிடிப்பு
நந்தா தேவி சிகரத்தில் மாயமான 5 மலையேற்ற வீரர்களின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4. கனடாவில் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி
கனடாவில் தேவாலயம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார்.
5. கனடா பேருந்து விபத்தில் 16 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை
கனடாவில் பேருந்து விபத்தில் 16 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.