உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 6 May 2019 11:00 PM GMT (Updated: 6 May 2019 7:27 PM GMT)

பிலிப்பைன்சின் நோர்டே மாகாணத்தை நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.


* அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணம் நியூ ஹெவன் நகரில் உள்ள ஒரு வீட்டில் தீப்பிடித்ததில் 2 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

* இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத செயல்களால் காசா மக்களுக்கு எதுவும் கிடைக்க போவதில்லை என்றும், இதனால் துயரம் தான் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வன்முறையை நிறுத்திவிட்டு அமைதியை நோக்கி காசா மக்கள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

* ரஷியாவின் ஸ்டயாவர்போல் பிராந்தியத்தில் உள்ள செலன்ஸ்நோவோடஸ்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீவிபத்து நேரிட்டது. எனினும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு அடுக்குமாடி குடியிருப்பின் வீடுகளில் இருந்த 50-க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டனர்.

* பிலிப்பைன்சின் நோர்டே மாகாணத்தை நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.


Next Story