ஜப்பானில் அனிமேஷன் நிறுவனத்திற்கு தீ வைப்பு, 24 பேர் உயிரிழப்பு


ஜப்பானில் அனிமேஷன் நிறுவனத்திற்கு தீ வைப்பு, 24 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 18 July 2019 10:04 AM GMT (Updated: 18 July 2019 11:01 AM GMT)

ஜப்பானில் அனிமேஷன் நிறுவனத்திற்கு தீ வைக்கப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 12-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.


டோக்கியோவில் உள்ள க்யோட்டோ அனிமேஷன் நிறுவனத்தில் இன்று தீ விபத்து நேரிட்டுள்ளது. விபத்து தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். தீ மளமளவென ஒவ்வொரு மாடிக்காக தாவியதில் பலர் சிக்கிக்கொண்டனர். புகைமூட்டம் அவர்களை மூச்சு திணறச்செய்தது. தீயணைப்பு வீரர்களை தீயை அணைத்து அவர்களை காப்பாற்ற முயற்சியை செய்தனர். 12-க்கும் மேற்பட்டோரை காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் சிக்கி 24 பேர் பலியாகினர். உள்நோக்கத்துடன் நிறுவனத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்வதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story