“குண்டான பெண்கள் சொர்க்கத்துக்கு போகமாட்டார்கள்” என கூறிய பாதிரியாரை மேடையில் தாக்கிய பெண்!


“குண்டான பெண்கள் சொர்க்கத்துக்கு போகமாட்டார்கள்” என கூறிய பாதிரியாரை மேடையில் தாக்கிய பெண்!
x
தினத்தந்தி 20 July 2019 3:30 PM GMT (Updated: 20 July 2019 3:30 PM GMT)

பிரேசிலில் சர்ச் ஒன்றில் குண்டான பெண்கள் சொர்க்கத்துக்கு போகமாட்டார்கள் என்று மேடையில் பேசிக் கொண்டிருந்த பாதிரியாரை பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரேசில் நாட்டின்  சர்ச் ஒன்றில்  பாதிரியாரான மார்சிலோ ரோஸி என்பவர்  உரையாற்றிக் கொண்டிருந்தார்.  அப்போது அங்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவரின் உரையைக் கேட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது பேசிய பாதிரியார்,  குண்டாக இருக்கும் பெண்கள் சொர்க்கத்துக்கு போகமாட்டார்கள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மேடையில் ஏறிய குண்டுப்பெண் ஒருவர்  பாதிரியாரை ஒரே அடியாக பலமாகத் தாக்கி மேடையில் இருந்து கீழே தூக்கி எறிந்தார்.   இதை சற்றும் எதிர்பாராத பாதுகாவலர்கள் உடனடியாக ஓடிச்சென்று பாதிரியாரை தூக்கிவிட்டனர். அதன்பின்னர் பாதிரியாரை  தாக்கிய பெண்ணையும் பிடித்து வைத்தனர். தாக்குதலுக்கு பின் பேசிய பாதிரியார், யாரும் கவலைப்பட வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன். லேசான வலி மட்டும் உள்ளது. வேறு ஒன்றும் இல்லை என கூறினார்.

பாதிரியாரை தாக்கிய பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவர் உடன் வந்த பெண்ணின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். பாதிரியார் புகார் எதுவும் தெரிவிக்காததால் அந்த  பெண் விடுவிக்கப்பட்டார்.

Next Story