நடித்துக் கொண்டிருந்தபோது மேடையில் உயிரிழந்த காமெடி நடிகர்


நடித்துக் கொண்டிருந்தபோது மேடையில் உயிரிழந்த காமெடி நடிகர்
x
தினத்தந்தி 22 July 2019 5:03 AM GMT (Updated: 22 July 2019 5:03 AM GMT)

நடித்துக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதால் மேடையில் காமெடி நடிகர் உயிரிழந்தார்.

பிரபல நகைச்சுவை நாடக நடிகர் மஞ்சுநாத் மேடையில் நாடகம் நடித்துக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதால் திடீரென உயிரிழந்தார்.

ஆனால் அதை அறியாத ரசிகர்கள் நாடகத்தில் இதுவும் ஒருகாட்சி என்று அவர் துடிதுடித்து விழுந்து உயிரை விட்டதையும் ரசித்துக் கொண்டிருந்தனர். இந்திய வம்சாவளியான 36 வயதேயான மஞ்சுநாத் நாயுடு, துபாயில் மேடையில் நடித்துக் கொண்டிருந்த போது இந்த சோக சம்பவம் நடந்தது.

வழக்கமாக மேடையில் தோன்றினாலேயே ரசிகர்களை சிரிக்க வைக்கக் கூடிய இந்த காமெடி நடிகர் அன்று எல்லோரையும் கண்ணீரில் மூழ்கடித்து விட்டார்.

Next Story