உலகைச்சுற்றி....


உலகைச்சுற்றி....
x
தினத்தந்தி 25 July 2019 10:30 PM GMT (Updated: 25 July 2019 4:54 PM GMT)

* ஜப்பானின் சிபா பிராந்தியத்தில் உள்ள கிழக்கு கடலோர பகுதியில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* பிரேசிலின் வடகிழக்கு மாகாணமான பெர்னாம்புகோவில் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்ததால் வெள்ளம் மற்றும் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 15 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* மெக்சிகோவின் தெற்கு பகுதியில் உள்ள மிச்சோவாகன் மாகாணத்தில் போலீஸ் அதிகாரிகளை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் இருந்து 2 போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேரும் பலியாகினர்.

* சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அமெரிக்கா ஆயுதங்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வலியுறுத்தி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை ஜனாதிபதி டிரம்ப், தனது ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்து விட்டார்.

Next Story