அகதிகள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்து -150 பேர் பலி


அகதிகள் சென்ற படகு நடுக்கடலில்  கவிழ்ந்து விபத்து -150 பேர் பலி
x
தினத்தந்தி 26 July 2019 12:31 PM GMT (Updated: 26 July 2019 12:31 PM GMT)

லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுவதற்காக அகதிகள் சென்ற படகு, நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழந்தனர்.

சொந்த நாடுகளில் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் மக்கள்,  அண்டைநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழ்வாதாரம் ஈட்ட முயற்சிக்கின்றனர். அவ்வாறு குடியுரிமை சான்று கிடைக்காமல் சட்டவிரோதமாக பிற நாடுகளில் குடியேற முயற்சிப்போரை கடத்தல் கும்பல் ஆசை வார்த்தை கூறி, அவர்களிடம் இருக்கும் பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு, இறுதியாக ஏதோ படகில் ஒட்டுமொத்தமாக அகதிகளை ஏற்றிவிட்டு செல்கிறது.

அப்படி, அண்மையில் லிபியாவின் அல் கோம்ஸ் நகரில் இருந்து ஒரு படகில் 300-க்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பா நோக்கி பயணித்துள்ளனர். அவர்கள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததில் 150 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும்  அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், இந்தாண்டில் மட்டும் இதுவரை மத்திய தரைக்கடல் வழியாக பயணித்த அகதிகளில் 600 பேர் உயிரிழந்ததாக ஐநா கூறியுள்ளது.

Next Story