எஃப் 16 ரக விமானங்களுக்கு அமெரிக்கா தொழில்நுட்பக் கண்காணிப்பை வழங்க ஒப்புதல்


எஃப் 16 ரக விமானங்களுக்கு அமெரிக்கா தொழில்நுட்பக் கண்காணிப்பை வழங்க  ஒப்புதல்
x
தினத்தந்தி 27 July 2019 7:36 AM GMT (Updated: 27 July 2019 7:36 AM GMT)

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அமெரிக்கப் பயணத்தைத் தொடர்ந்து அந்த நாட்டின் எஃப் 16 ரக விமானங்களுக்கு அமெரிக்கா தொழில்நுட்பக் கண்காணிப்பை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

பாகிஸ்தானுக்கு 125 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவத் தளவாட விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கும் தனது முடிவை பென்டகன் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள எஃப் 16 ரக விமானங்களுக்கு 24 மணி நேர தொழில்நுட்பக் கண்காணிப்பும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கான பாதுகாப்புத்துறை உதவிகளை நிறுத்த அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்ட நிலையில் அது தற்போது அமலில் இருந்தாலும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் சில வகை பாதுகாப்பு உதவிகளை மட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விமானப்படை விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று  பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தியபோது அவற்றை எதிர்கொள்ள  பாகிஸ்தான் எஃப் 16 ரக விமானங்களை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story