சீனாவை தாக்கிய சூறாவளி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
* சீனாவை தாக்கிய லெகிமா புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. 16 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.
* ரஷியா தலைநகர் மாஸ்கோவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார், ஒரு லாரி மற்றும் மினி பஸ் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து நேரிட்டது. இதில் 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.
* ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் நடைபெற்ற 8-வது கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்துவிட்டதாக தலீபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.
* அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள ஒரு தேவாலயத்துக்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
* நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் போகோஹரம் பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 8 பயங்கரவாதிகளும், 2 ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் 2 பேரும் கொல்லப்பட்டனர்.
சீனாவில் சிறுவன் ஒருவர் தன் தாய் மீது மோதிய காரை காலால் எட்டி மிதித்தும் ஆவேசமாகக் குரல் எழுப்பியும் தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை வளரவிடாமல் இந்தியா பாதுகாக்க வேண்டும் என இலங்கையின் மட்டகளப்பு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.