உரிமையாளரின் கட்டளைக்கேற்ப சிலை போல நின்ற நாய்கள்


உரிமையாளரின் கட்டளைக்கேற்ப சிலை போல நின்ற நாய்கள்
x
தினத்தந்தி 16 Aug 2019 5:16 AM GMT (Updated: 16 Aug 2019 5:16 AM GMT)

உரிமையாளரின் கட்டளைக்கேற்ப சிலை போல நின்ற நாய்களின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


சுவீடன் நாட்டில்  சண்ட்ஸ்வல் என்ற இடத்தைச் சேர்ந்த எவ்லின் என்பவர் ஆஸ்திரேலியன் கெல்பிஸ் வகையைச் சேர்ந்த நாய்களை வளர்த்து வருகிறார். ஜாக்ஸன், கேஷ் மற்றும் எக்ஸ் என்று பெயரிடப்பட்ட அந்த நாய்கள் வேட்டைக்குப் புறப்படும் முன் எவ்லினின் உத்தரவிற்கு ஏற்ப செதுக்கி வைத்த கல் சிற்பம் போல் அசையாமல் நின்றன.

பின்னர் எவ்லின் மறு உத்தரவிட்டதும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் சீறிப் பாய்ந்து சென்றன.


Next Story