அமெரிக்க பொருளாதாரத்தில் மந்த நிலை இல்லை : டிரம்ப்


அமெரிக்க பொருளாதாரத்தில் மந்த நிலை இல்லை : டிரம்ப்
x
தினத்தந்தி 19 Aug 2019 2:06 PM GMT (Updated: 19 Aug 2019 2:06 PM GMT)

அமெரிக்க பொருளாதாரம் 'மிகச் சிறப்பாக' செயல்படுவதாகக் கூறி அமெரிக்கா மந்தநிலையில் விழும் அபாயம் இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

வாஷிங்டன், 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது : -

நான் அமெரிக்க பொருளாதாரத்தில் மந்தநிலையை காணவில்லை. ஆனால், உலக நாடுகள் மந்தநிலையில் உள்ளது. அமெரிக்கா மிகச் சிறப்பாக  செயல்படுகிறது, எங்கள் நுகர்வோர்கள் பணக்காரர்கள், நாங்கள் மிக அதிகமான வரி குறைப்பை அளிப்பதால் எங்களது  நுகர்வோர்கள் செல்வ செழிப்புடன் உள்ளனர். பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் அமெரிக்காவிற்கு பொருளாதார மந்தநிலை ஏற்படப் போவதில்லை என்று கூறுகிறார்கள் என ஜெர்சியில் ஊடகவியலாளர்களிடம் டிரம்ப் கூறியதாக  கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 14 அன்று, அமெரிக்க பங்குச் சந்தைகள் சுமார் 3 சதவீதம் சரிந்தன, இருப்பினும் அவை வார இறுதிக்குள் இழப்பை மீட்டெடுத்தன. இதையடுத்து, டிரம்பிடம் கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளை  மாளிகையின் பொருளாதார ஆலோசகர் லாரி குட்லோ அமெரிக்க  பொருளாதாரம் 'நல்ல நிலையில் உள்ளது' என்று கூறியதை அடுத்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

அமெரிக்காவில் 2008/2009 ஆம் ஆண்டுகளின் தனிநபர் நுகர்வில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால், சுமார் 88,00,000 பேர் வேலையிழந்து, அமெரிக்கா பெரும்  பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இதனால் அமெரிக்கா மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளும் பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story