நாடாளுமன்ற விவாதத்தில் எம்.பி.யின் குழந்தையை கவனித்து கொண்ட சபாநாயகருக்கு பாராட்டு குவிகிறது


நாடாளுமன்ற விவாதத்தில் எம்.பி.யின் குழந்தையை கவனித்து கொண்ட சபாநாயகருக்கு பாராட்டு குவிகிறது
x
தினத்தந்தி 22 Aug 2019 3:28 PM GMT (Updated: 22 Aug 2019 3:28 PM GMT)

நியூசிலாந்தில் நாடாளுமன்ற விவாதத்தில் எம்.பி.யின் குழந்தையை கவனித்து கொண்ட சபாநாயகருக்கு பாராட்டு குவிகிறது.நியூசிலாந்து நாட்டில் எம்.பி. தமாட்டி காஃபி என்பவர் வாடகை தாயின் மூலம் கடந்த ஜூலை மாதம் தந்தையாகி உள்ளார். அவருக்கு பிரசவ கால விடுப்பு வழங்கப்பட்டது. பிரசவ கால விடுப்பு முடிந்தப் பிறகு, முதல் நாளில் தனது மகனுடன் நாடாளுமன்றம் வந்தார். அப்போது மகனுடன் நாடாளுமன்றத்திற்கு வந்தது தொடர்பாக பேசினார்.    எனது மகன் எங்கள் வாழ்வில் அற்புதத்தை ஏற்படுத்தி இருக்கிறார் எனக் குறிப்பிட்டார். பின்னர் விவாதத்தில் எம்.பி. தமாட்டி கலந்துக்கொண்டார். விவாதம் தொடங்கிய போது தமாட்டியின் கைக்குழந்தையை சபாநாயக  மல்லார்ட் கவனித்துக் கொண்டார். 

சபாநாயகர் இருக்கையில் இருந்த அவர் குழந்தைக்கு புட்டி பாலில் பால் கொடுத்தார். விவாத நிமிடங்களில் தமாட்டிக்கு குழந்தையால் இடையூறு எற்படாத வண்ணம்  பார்த்துக்கொண்டார். 

மல்லார்ட்டின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும், குழந்தையுடன் சபாநாயகர் நாற்காலியில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  பெரும்பாலும் சபாநாயகர் நாற்காலியில் அமர உயர் அதிகாரிகளே அனுமதிக்கப்படுவர். ஆனால், தற்போது நம்மோடு சிறப்பு விருந்தினர் ஒருவர் இருக்கிறார். உங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினர் வருகைக்கு வாழ்த்துகள் தமாட்டி என தெரிவித்து இருந்தார். அவருடைய செயலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.  

Next Story