காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு


காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 30 Aug 2019 10:18 PM GMT (Updated: 30 Aug 2019 10:18 PM GMT)

காங்கோவில் கடந்த 2014-ம் ஆண்டு எபோலா வைரஸ் தாக்கி பெரும் உயிர்சேதம் ஏற்பட்ட நிலையில், அங்கு மீண்டும் எபோலா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது.


* இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள ஸ்ட்ரோம்போலி எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டு நெருப்பு குழம்பை கக்கி வருகிறது. மேலும் எரிமலையை சுற்றி பல மைல் தொலைவுக்கு சாம்பல் புகை பரவி வருகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

* மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த 2014-ம் ஆண்டு எபோலா வைரஸ் தாக்கி பெரும் உயிர்சேதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அங்கு மீண்டும் எபோலா வைரஸ் தாக்கம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. எபோலா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை 2 ஆயிரம் பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்த மேடலின் வெஸ்டர்ஹவுட், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் அலுவல் ரீதியாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் பத்திரிகையாளர்களை சந்தித்து சில தகவல்களை வெளியிட்டதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

* நியூசிலாந்தில் கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், இந்தாண்டு மட்டும் சுமார் 850 பேர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Next Story