உலக செய்திகள்

‘சார்ஜ்’ போட்ட செல்போன் தவறி விழுந்தது குளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி + "||" + Accountant dies after phone falls into bath while on charge

‘சார்ஜ்’ போட்ட செல்போன் தவறி விழுந்தது குளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி

‘சார்ஜ்’ போட்ட செல்போன் தவறி விழுந்தது குளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி
சார்ஜ் போட்ட செல்போன் குளியல் தொட்டியில் தவறி விழுந்தது மின்சாரம் பாய்ந்ததால் இளம்பெண் பலியானார்.
மாஸ்கோ,

ரஷியாவின் கிரோவோ-செபேட்ஸ்க் நகரை சேர்ந்த 26 வயது இளம்பெண் எவ்ஜீனியா சுல்யாதியேவா. தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் குளிப்பதற்காக தனது வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்றார்.


அங்கு அவர் குளியல் தொட்டியில் தண்ணீரை நிரப்பிவிட்டு, அதன் அருகில் உள்ள மின்சார பெட்டியில் தனது செல்போனுக்கு ‘சார்ஜ்’ போட்டார். பின்னர் அவர் குளியல் தொட்டிக்குள் இறங்கி குளித்துக்கொண்டிருந்தார்.

அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக ‘சார்ஜ்’ போடப்பட்டிருந்த அவரது செல்போன் குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்தது. இதில் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து எவ்ஜீனியா சுல்யாதியேவாவின் உடலில் மின்சாரம் பாய்ந்தது.

இதற்கிடையே தனது மகள் குளியலறைக்குள் சென்று நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த எவ்ஜீனியா சுல்யாதியேவாவின் தாய் உள்ளே சென்று பார்த்தார். அங்கு எவ்ஜீனியா சுல்யாதியேவா குளியல் தொட்டிக்குள் பிணமாக கிடந்தார். இதைக் கண்டு சுல்யாதியேவாவின் தாய் அதிர்ச்சியில் உறைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.