அமெரிக்காவில் விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய கைக்கடிகாரம்


அமெரிக்காவில் விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய கைக்கடிகாரம்
x
தினத்தந்தி 24 Sep 2019 11:00 PM GMT (Updated: 24 Sep 2019 4:49 PM GMT)

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை சேர்ந்தவர் பாப். இவரது மகன் கேப் பர்டெட். அண்மையில் இவர் தனது தந்தை வருகைக்காக வீட்டில் காத்திருந்தார்.

வாஷிங்டன், 

பாப் அணிந்திருந்த ஆப்பிள் கைக்கடிகாரத்தில் இருந்து கேப் பர்டெடுக்கு அப்போது ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பாப் அணிந்திருந்த ஆப்பிள் கைக்கடிகாரம் கீழே விழுந்துவிட்டது என்றும், அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்ற விவரமும் இருந்தது.

இதன் மூலம் தனது தந்தை விபத்தில் சிக்கியிருக்கலாம் என்பதை உணர்ந்த பர்டெட், அவசர சிகிச்சை மையத்தை தொடர்பு கொண்டு விபத்து நடந்த இடத்தை தெரிவித்துள்ளார். அடுத்த ½ மணி நேரத்தில் மருத்துவமனை ஒன்றில் அவரது தந்தை இருக்கிறார் என்ற தகவலும் ஆப்பிள் கைக்கடிகாரம் மூலம் பர்டெட்டுக்கு தகவல் கிடைத்தது.

தனது தந்தையின் உயிரை காப்பாற்ற ஆப்பிள் கைக்கடிகாரத்தின் அற்புதமான தொழில் நுட்பம் உதவியது குறித்து கேப் பர்டெட் மகிழ்ச்சி தெரிவித்து “பேஸ்புக்”கில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டார். அந்த பதிவை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம்குக் ‘லைக்’ செய்தார்.


Next Story