கலிபோர்னியாவில் காட்டுத்தீ : மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்


கலிபோர்னியாவில் காட்டுத்தீ : மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
x
தினத்தந்தி 25 Oct 2019 6:12 AM GMT (Updated: 25 Oct 2019 6:12 AM GMT)

கலிபோர்னியாவில் காட்டுத்தீ பரவி வருவதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

கலிபோர்னியா.

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாநிலத்தில் அதிக வெப்பம் மற்றும் வறண்ட காற்று வீசி வருவதால், கடந்த புதன்கிழமை இரவு முதல் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

இதனால் முன்னெச்சரிக்கையாக சுமார் 2 லட்சம் வீடுகளின் மின் இணைப்புகளை துண்டித்து, அதிகாரிகள் தீப்பற்றி எரியும் பகுதிகளை ஒட்டிய நகரங்களிலிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர்.

மேலும் ஹெலிகாப்டர், விமானங்கள் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Next Story