பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் அனுமதி


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 26 Oct 2019 8:41 AM GMT (Updated: 26 Oct 2019 8:41 AM GMT)

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் லாகூர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லாகூர்,

2017-ம் ஆண்டு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்குகளில் ஒன்றான அல் அசீசியா ஸ்டீல் ஆலை ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலையை கருத்தில் கொண்டு லாகூர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில் நவாஸ் ஷெரீப்புக்கு தற்போது லேசான மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் லாகூர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story