ஈரானின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவு


ஈரானின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவு
x
தினத்தந்தி 6 Nov 2019 10:13 PM GMT (Updated: 6 Nov 2019 10:13 PM GMT)

ஈரானின் தெற்கு பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது.


* ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்முஸ்கான் மாகாணத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* ஈராக்கில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் தொடர்ந்து வன்முறை வெடித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் மட்டும் 97 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ரஷியாவில் இருந்து வியட்நாமுக்கு 241 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்களுடன் புறப்பட்டு சென்ற போயிங் 757-200 ரக விமானம் சீனாவில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் சியான்யாங் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் விமானத்தில் இருந்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

* நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் போகோஹரம் பயங்கரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே திடீர் மோதல் வெடித்தது. ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.

Next Story