உலக செய்திகள்

கொலம்பியாவில் ருசிகரம்: குழந்தையின் உயிரைக்காப்பாற்றிய பூனை - இணையத்தில் வைரலாகும் வீடியோ + "||" + Taste of Colombia: Cat that saved the baby's life - video that goes viral on the internet

கொலம்பியாவில் ருசிகரம்: குழந்தையின் உயிரைக்காப்பாற்றிய பூனை - இணையத்தில் வைரலாகும் வீடியோ

கொலம்பியாவில் ருசிகரம்: குழந்தையின் உயிரைக்காப்பாற்றிய பூனை - இணையத்தில் வைரலாகும் வீடியோ
கொலம்பியாவில் குழந்தையின் உயிரைக்காப்பாற்றிய பூனையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
போகோடா,

உலகம் முழுவதும் பலர் தங்களது வீடுகளில் நாய், பூனை போன்றவற்றை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அந்த வளர்ப்பு பிராணிகள் பல நேரங்களில் தங்களது எஜமானர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்களின் உயிரை காப்பாற்றி தங்களது நன்றியை வெளிப்படுத்துகின்றன.


அப்படிதான் கொலம்பியாவில் ஒரு வயதே ஆன குழந்தையின் உயிரை ஒரு பூனை காப்பாற்றி ‘ஹீரோ’வாகி இருக்கிறது. தலைநகர் போகோடாவில் உள்ள ஒரு வீட்டில் அந்தக் குழந்தை அங்கும் இங்குமாக தவழ்ந்து விளையாடி கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த குழந்தை தவழ்ந்து மாடி படிக்கட்டுக்கு அருகே சென்றது.

அப்போது அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த வீட்டின் செல்லப்பிராணியான பூனை பாய்ந்து வந்து, குழந்தையை பிடித்து தடுத்து நிறுத்தியது. மேலும் குழந்தையை எதிர்திசையில் வீட்டுக்குள் தள்ளிவிட்டு விட்டு மாடி படிக்கட்டு அருகிலேயே பூனை அமர்ந்துகொண்டது. இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

வீட்டின் உரிமையாளர் தனது குழந்தையின் உயிரைக்காப்பாற்றிய பூனையின் செயலை பாராட்டி அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. கொலம்பியாவில் கார் வெடித்து சிதறி 7 பேர் பலி
கொலம்பியாவில் கார் வெடித்து சிதறி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
2. கொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் பலி
கொலம்பியாவில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.
3. ராஜஸ்தானில் தனது குழந்தைக்கு "காங்கிரஸ்" என பெயர் சூட்டிய ஊழியர்
ராஜஸ்தான் மாநிலத்தில் வினோத் ஜெயின் என்பவர் தனது மகனுக்கு காங்கிரஸ் என பெயர் சூட்டியுள்ளார்.
4. ரிசாட்-2 பிஆர்1 செயற்கைகோளின் ஆண்டனா விரிவடையும் காட்சி -டுவிட்டரில் வெளியிட்டது இஸ்ரோ
ரிசாட்-2 பிஆர்1 செயற்கைகோளின் ரேடியல் ஆண்டனா விண்வெளியில் விரிவடையும் காட்சியை இஸ்ரோ டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
5. முகநூலில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவிட்ட மெக்கானிக் கைது
முகநூலில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவிட்ட மெக்கானிக்கை போக்சோ மற்றும் ஐ.டி. சட்டத்தின் கீழ் திருச்சி மாநகர போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் முதன்முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.