வீடுகளின் மீது விமானம் விழுந்து தீப்பிடித்தது - 23 பேர் பலி


வீடுகளின் மீது விமானம் விழுந்து தீப்பிடித்தது - 23 பேர் பலி
x
தினத்தந்தி 24 Nov 2019 9:05 PM GMT (Updated: 24 Nov 2019 9:05 PM GMT)

வீடுகளின் மீது விமானம் விழுந்து தீப்பிடித்த விபத்தில் சிக்கி 23 பேர் பலியாகினர்.

கின்ஷாசா,

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வடக்கு கிவு மாகாணத்தின் தலைநகர் கோமாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, பெனி நகருக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், விமான நிலையத்தையொட்டி இருக்கும் குடியிருப்பு பகுதியில் விழுந்தது. வீடுகளின் மீது விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்தது.

இந்த கோரவிபத்தில் விமானத்தில் பயணம் செய்தவர்கள் மற்றும் வீடுகளுக்குள் இருந்தவர்கள் என மொத்தம் 23 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கக்கூடும் என நம்பப்படுவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என தெரிகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Next Story