ஆப்கானிஸ்தானில் சரணடைந்த 900 ஐ.எஸ். தீவிரவாதிகளில் 10 இந்தியர்கள்


ஆப்கானிஸ்தானில் சரணடைந்த 900 ஐ.எஸ். தீவிரவாதிகளில் 10 இந்தியர்கள்
x
தினத்தந்தி 25 Nov 2019 6:33 AM GMT (Updated: 25 Nov 2019 6:33 AM GMT)

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 900 பேர் அந்நாட்டு பாதுகாப்பு படையிடம் சரணடைந்திருப்பதாகவும், அதில் 10 பேர் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த 12-ம் தேதி நடவடிக்கையின்போது, 13 பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட 93 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சரணடைந்தனர்.

இதேபோல, கடந்த இரு வாரங்களில் மொத்தம் 900 பேர்  சரணடைந்துள்ளதாகவும், அதில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சரணடைந்தவர்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளும் அவர்களது குடும்பத்தினரும் அடக்கம்.

அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் சரணடைந்துள்ளதாகவும், அதில் கேரளத்தை சேர்ந்தவர்களே அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது இந்த 10 பேரும் காபூலில்  வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் யார் என்ற விவரங்களை அதிகாரிகள் திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

Next Story