உலக செய்திகள்

சவுதி அரேபியாவில் ஓட்டல்களில் பெண்களுக்கு தனி நுழைவாயில் தேவையில்லை + "||" + Saudi Arabia ends gender-segregated entrances for restaurants

சவுதி அரேபியாவில் ஓட்டல்களில் பெண்களுக்கு தனி நுழைவாயில் தேவையில்லை

சவுதி அரேபியாவில் ஓட்டல்களில் பெண்களுக்கு தனி நுழைவாயில் தேவையில்லை
சவுதி அரேபியாவில் ஓட்டல்களில் பெண்களுக்கு தனி நுழைவாயில் தேவையில்லை என அந்நாட்டு அறிவித்துள்ளது.
ரியாத்,

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக கடந்த 2017-ம் ஆண்டு பொறுப்பு ஏற்றுக்கொண்ட முகமது பின் சல்மான், பழமைவாத சமூகத்தை தாராளவாதத்தின் பக்கம் கொண்டு செல்ல பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் நாட்டில் நிலவும் பாலின பாகுபாட்டை களையும் விதமாக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் அந்த நாட்டில் பல ஆண்டுகளாக பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு சமஉரிமை வழங்கப்பட்டு வருகிறது.


கடந்த ஆண்டு பெண்கள் கார் ஓட்டுவதற்கு இருந்த தடையை அகற்றிய சவுதி அரேபிய அரசு, ஆண் துணையில்லாமல் பெண்கள் தனியாக பயணிப்பதற்கு இருந்த தடையை இந்த ஆண்டு தொடக்கத்தில் ரத்து செய்தது.

இந்த நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள ஓட்டல்கள் இனி ஆண்கள்-பெண்களுக்கு என்று தனித் தனியாக நுழைவாயில் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுவரை, அந்த நாட்டில் உள்ள ஓட்டல்கள் குடும்பங்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழைவாயிலும் தனியாக வரும் ஆண்களுக்கு மட்டும் தனியாக ஒரு நுழைவாயிலும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று இருந்தது.

அதே போல் ஓட்டல்களின் உள்ளேயும், ஆண்கள் மட்டுமே இருக்கும் பகுதியும், பெண்கள் மற்றும் குடும்பமாக வந்த வாடிக்கையாளர்கள் இருக்கும் பகுதியும் திரை போட்டு பிரிக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இனி ஓட்டல்கள் பாலின அடிப்படையில் நுழைவாயில் வைத்திருப்பது கட்டாயம் அல்ல என்றும், அப்படி தனித்தனி நுழைவாயில் வேண்டுமா என்பதை அந்தந்த ஓட்டல்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் அந்த நாட்டின் நகராட்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஏமனில் இருந்து சவுதி அரேபியாவின் நகரங்களை குறிவைத்து வீசப்பட்ட ஏவுகணைகள் தடுத்து நிறுத்தம்
ஏமனில் இருந்து தனது நகரங்களை குறிவைத்து வீசப்பட்ட ஏவுகணைகளை சவூதி அரேபியா தடுத்து நிறுத்தியது.
2. சீனா நகரங்களில் இருந்து வருபவர்கள் சவுதி அரேபியாவுக்குள் நுழைய தடை
கொரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் சீனா நகரங்களில் இருந்து சவுதி அரேபியாவுக்குள் நுழைய பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
3. சவுதி இளவரசர் அமேசான் தலைமை நிர்வாக அதிகாரியின் போனை ஹேக் செய்தாரா? சவுதி அரேபியா மறுப்பு
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் தொலைபேசியை ஹேக் செய்ததன் பின்னணியில் சவுதி அரேபியா இருப்பதாக வெளிவந்துள்ள ஊடக செய்தி அறிக்கை அபத்தமானது என்று சவுதி அரேபியா கூறி உள்ளது.
4. மும்பையில் கடைகள், ஓட்டல்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி
மும்பையில் கடைகள், ஓட்டல்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
5. விலங்கியல் பூங்காவில் புலிக்கூண்டுக்குள் சென்றவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
சவுதி அரேபியாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் புலியால் தாக்கப்பட்டவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.