ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் சட்டவிரோதமாக தங்க சுரங்கம் நடத்தி வந்ததாக 62 பேர் கைது


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில் சட்டவிரோதமாக தங்க சுரங்கம் நடத்தி வந்ததாக 62 பேர் கைது
x
தினத்தந்தி 15 Dec 2019 9:57 PM GMT (Updated: 15 Dec 2019 9:57 PM GMT)

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவின் மேற்கு பகுதியில் சட்டவிரோதமாக தங்க சுரங்கம் நடத்தி வந்ததாக 2 பெண்கள் உள்பட 62 பேர் கைது செய்யப்பட்டனர்.


* ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவின் மேற்கு பகுதியில் உள்ள கென்யாசியில் முறையாக உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக தங்க சுரங்கம் நடத்தி வந்ததாக 2 பெண்கள் உள்பட 62 பேரை அந்த நாட்டு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

* சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அண்மையில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக அங்குள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்துக்குள் வெள்ளம் புகுந்தது. இதில் வெள்ளத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலியாகினர். 14 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

* வடகொரியா ஒரே வாரத்தில் 2-வது முறையாக செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து முக்கிய சோதனை நடத்தி இருக்கும் நிலையில், ஜப்பான் மற்றும் தென்கொரியாவுடன் இணைந்து வடகொரியாவின் நடவடிக்கைகளை மிக உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

* ஈரானில் அரசு வங்கிகள், மின்சார வாரியம் மற்றும் உள்ளூர் ஊடகங்களை குறிவைத்து ஒரே வாரத்தில் 2 முறை ‘சைபர்’ தாக்குதல் நடத்த மர்ம நபர்கள் முயற்சித்ததாகவும், ஆனால் அவர்களின் சதி வெற்றிகரமாக முறையடிக்கப்பட்டதாகவும் அந்த நாட்டின் தகவல் தொடர்பு துறை மந்திரி முகமது ஜாவத் அசாரி தெரிவித்துள்ளார்.

Next Story