ஹோண்டுராஸ் சிறைச்சாலையில் கலவரம் : 36 பேர் பலி


ஹோண்டுராஸ் சிறைச்சாலையில் கலவரம் : 36 பேர் பலி
x
தினத்தந்தி 23 Dec 2019 10:31 AM GMT (Updated: 23 Dec 2019 10:31 AM GMT)

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராசில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளிடையே மோதல் ஏற்பட்டது.

டெகுசிகல்பா,

மத்திய அமெரிக்காவில் உள்ள ஹோண்டுராஸ் நாட்டின் தலைநகரான டெகுசிகல்பாவில் இருந்து 60 கி.மீ தொலைவில் எல்-பொர்வெனிர் என்ற சிறைச்சாலை உள்ளது. 

இந்த சிறைச்சாலையில் கடந்த 20 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை)  சிறைக்கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. சிறைக்கைதிகள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்க தொடங்கினர்.

இந்த தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர், மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து நேற்று மதியம் மீண்டும் சிறைச்சாலைக்குள் கலவரம் ஏற்பட்டது.

இந்த கலவரத்தில் மேலும் 18 பேர் பலியாகினர். இதனையடுத்து அங்கு நிலைமையை கட்டுப்படுத்த ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள 27 சிறைச்சாலைகளில் மொத்தம் 22,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலையில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் விதமாக கைதிகள் தங்களுக்குள் குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு மோதலில் ஈடுபடும் சம்பவங்கள் அங்கு அதிகரித்து வருகின்றன.

Next Story