அமெரிக்காவில் வெவ்வேறு இடங்களில் நடந்த 4 துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி; 7 பேர் படுகாயம்


அமெரிக்காவில் வெவ்வேறு இடங்களில் நடந்த 4 துப்பாக்கிச்சூடு:  3 பேர் பலி; 7 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 23 Dec 2019 9:08 PM GMT (Updated: 23 Dec 2019 9:08 PM GMT)

அமெரிக்காவில் பால்டிமோர் நகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த 4 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 3 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.


* அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது அரசியல் எதிரியான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது ஊழல் விசாரணை நடத்த உக்ரைன் நாட்டுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில் பதவி நீக்க விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இந்த சூழலில் ஜூலை மாதம் 25-ந்தேதி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் டிரம்ப் இடையேயான 91 நிமிட கலந்துரையாடலுக்கு பிறகு வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரியான மைக் துவ்வே, உயர் பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு உக்ரைனுக்கு வழங்கும் உதவிகளை நிறுத்தினார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

* சீனாவில் இறக்குமதியின் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் 850-க்கும் அதிகமான வணிகப் பொருட்களின் மீதான வரியை 8-ல் இருந்து 12 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக சீன நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

* அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த 4 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 3 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

* பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் துணை தலைவருமான மரியம் நவாசின் பெயரை வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்ட பட்டியலில் இருந்து நீக்க முடியாது என பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு திட்டவட்டமாக கூறி உள்ளது.


Next Story