இலங்கை விபத்தில் இறந்த 3 இந்தியர் அடையாளம் தெரிந்தது


இலங்கை விபத்தில் இறந்த 3 இந்தியர் அடையாளம் தெரிந்தது
x
தினத்தந்தி 25 Dec 2019 7:59 PM GMT (Updated: 25 Dec 2019 7:59 PM GMT)

இலங்கை விபத்தில் இறந்த 3 இந்தியர்களாக, இந்தி எழுத்தாளர் கங்காபிரசாத் விமல் மற்றும் குடும்பத்தினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு,

இலங்கை கொழும்பு நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு ஒரு வேன், கன்டெய்னர் லாரி மீது மோதியதில் 3 இந்தியர்கள் பலியானார்கள். முதலில் அவர்கள் யார் என்று அடையாளம் தெரியாமல் இருந்தது. போலீஸ் விசாரணையில் அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியை சேர்ந்த 80 வயது இந்தி எழுத்தாளர் கங்காபிரசாத் விமல் மற்றும் அவரது குடும்பத்தினர் 2 பேர் என தெரிந்தது. விமல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், ஆக்ரா கேந்திரியா இந்தி நிறுவனம் ஆகியவைகளில் முக்கிய பொறுப்பாளராகவும் இருந்தார்.


Next Story