புதரில் மறைந்திருக்கும் புகைப்பட நிபுணர்கள்.. எங்களை பின் தொடராதீர்கள்... ஹாரி கடும் எச்சரிக்கை


புதரில் மறைந்திருக்கும் புகைப்பட நிபுணர்கள்.. எங்களை பின் தொடராதீர்கள்... ஹாரி கடும் எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 Jan 2020 6:32 AM GMT (Updated: 22 Jan 2020 6:32 AM GMT)

தங்களை பின் தொடர்ந்து வந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என் ஹாரி ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லண்டன்

இங்கிலாந்தின் இளவரசராக இருந்த ஹாரியும், அவர் மனைவி மேகனும் அரச கடமைகளில் இருந்து விலகுவதாகவும், தங்களது நேரத்தை வடஅமெரிக்கா மற்றும் கனடாவில் பிரித்து செலவிட போவதாகவும் அறிவிப்பை வெளியிட்டனர்.

இதையடுத்து கனடாவுக்கு இருவரும் சென்று தங்களது புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலில், தங்களை பின்தொடர்ந்து வந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு ஹாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இருவரும் கனடாவின் வான்கூவர் தீவில் உள்ள விக்டோரியா சொகுசு இல்லத்தில் குடியேறியுள்ளனர்.

ஹாரி தொடர்பான புதிய புகைப்படங்கள் இங்கிலாந்து  பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன. அவை அனைத்தும் புதரில் மறைந்திருந்து எடுக்கப்பட்டதாக ஹாரியின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆவேசம் அடைந்துள்ள ஹாரி, தங்களை பின்தொடர்ந்து வந்தால், சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story