உலக செய்திகள்

லாகூரில் காணப்பட்ட ஏலியன் வளையம்! - வைரல் வீடியோ + "||" + Alien ring found in Lahore! - Viral Video

லாகூரில் காணப்பட்ட ஏலியன் வளையம்! - வைரல் வீடியோ

லாகூரில் காணப்பட்ட ஏலியன் வளையம்! - வைரல் வீடியோ
லாகூரில் வானில் தென்பட்ட கருப்பு புகை வளையம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
லாகூர்,

பாகிஸ்தானில் உள்ள லாகூரில் சில தினங்களுக்கு முன் வானில் கருப்பு நிறத்தில் புகை போன்ற வளையம் மிதந்து சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் கடந்த திங்கட்கிழமையன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அன்று முதல் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை கண்டவர்கள் பலர் இதுகுறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

சிலர் இது ஏலியன்களின் வேலை என்று கூறி வருகின்றனர். இன்னும் சிலர் இது மற்றொரு பரிணாமத்திற்கு செல்வதற்கான வழி என்று கூறுகின்றனர். 

இந்த வீடியோவை கண்ட சிலர் இது போன்ற வளையங்கள் தங்கள் பகுதியிலும் தோன்றியதாக கூறியுள்ளனர். இதனால் சதி கோட்பாட்டாளர்கள் இடையே இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் இந்த வீடியோ குறித்து ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கையில், கருப்பு நிறம் கொண்ட வளைய வடிவிலான புகை ஏதேனும் தொழிற்சாலையில் இருந்து வெளிப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். இயல்பாக வட்ட வடிவிலான ஒரு பொருள் வெடித்துச் சிதறும் போதும் இது போன்ற வளையங்கள் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆண்டி என அழைத்ததால் 4 வயது குழந்தையை மோசமான வார்த்தையால் திட்டிய நடிகை
ஆண்டி என அழைத்ததால் 4 வயது குழந்தையை பாலிவுட் நடிகை ஒருவர் மோசமான வார்த்தையால் திட்டி உள்ளார்.
2. மகளிர் கிரிக்கெட்: ஹர்மான்பிரீத் கவுர் அசத்தல் கேட்ச்
மேற்கிந்திய தீவுகளுடனான ஒருநாள் போட்டியின் போது இந்திய வீராங்கனை ஹர்மான்பிரீத் கவுர் பிடித்த கேட்ச் வீடியோ வைரலாகி வருகிறது.