உலக செய்திகள்

அமெரிக்காவில் விமானம் சுவரில் மோதி தீப்பிடித்தது; 4 பேர் சாவு + "||" + In America The aircraft caught fire after colliding with the wall 4 people die

அமெரிக்காவில் விமானம் சுவரில் மோதி தீப்பிடித்தது; 4 பேர் சாவு

அமெரிக்காவில் விமானம் சுவரில் மோதி தீப்பிடித்தது; 4 பேர் சாவு
அமெரிக்காவில் விமானம் சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
வாஷிங்டன், 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கோரோனா விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. விமானத்தில் விமானி உள்பட 4 பேர் இருந்தனர்.

விமானம் ஓடு பாதையில் இருந்து மேல் நோக்கி பறக்க தொடங்கிய சில நொடிகளில் திடீரென விமானியின் காட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமான நிலையத்தின் எல்லை சுவர் மீது விமானம் மோதி தீப்பிடித்தது.

பின்னர் தரையில் விழுந்த விமானம் முற்றிலுமாக எரிந்து உருகுலைந்து போனது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. 5 சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்த ஊழியர்
அமெரிக்காவில் பீர் தொழிற்சாலையில் 5 சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலைச் செய்து கொண்ட ஊழியர்.
2. அமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’ கேத்தரின் ஜான்சன் மரணம்
அமெரிக்காவை சேர்ந்த பெண் கணித மேதை கேத்தரின் ஜான்சன். மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்பட்டு வந்த இவர், வயோதிகம் காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101.
3. அமெரிக்காவில் விண்ணில் பறக்க முயன்ற விமானி தவறி விழுந்து சாவு
அமெரிக்காவில் விண்ணில் பறக்க முயன்ற விமானி தவறி விழுந்து உயிரிழந்தார்.
4. அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
5. அமெரிக்காவின் நிகழ்ந்த பஸ் விபத்தில் 3 பேர் பலி - 18 பேர் படுகாயம்
அமெரிக்காவின் சாண்டியாகோ நகரில் நிகழ்ந்த பஸ் விபத்தில், 3 பேர் பலியாயினர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர்.