பாலியல் பலாத்காரத்தின் போது வலிப்பு நோயால் பாதிக்கபட்டதைப்போல் உணர்ந்தேன் நடிகை கண்ணீர் மல்க சாட்சி


பாலியல் பலாத்காரத்தின் போது வலிப்பு நோயால் பாதிக்கபட்டதைப்போல் உணர்ந்தேன் நடிகை கண்ணீர் மல்க  சாட்சி
x
தினத்தந்தி 24 Jan 2020 12:28 PM GMT (Updated: 24 Jan 2020 12:28 PM GMT)

ஹார்வி வெயின்ஸ்டீனால் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் போது வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை போன்று உணர்ந்தேன என நடிகை அன்ன பெல்லா கண்ணீர் மல்க கோர்ட்டில் கூறினார்.

நியூயார்க்: 

பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல  ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது நடிகை ஏஞ்சலினா ஜூலி  உள்பட 80-க்கும் மேற்பட்ட நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் புகார் கூறினர்.

இதுபோல் நடிகை ரோஸ் மெக்கோவன், அன்ன பெல்லா உள்ளிட்ட மேலும் பல நடிகைகளும் அவர் மீது செக்ஸ் புகார் கூறினார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

தி சோப்ரானோஸ்"  படத்தில் நடித்து மிகவும் பிரபலமான அன்ன பெல்லா சியோரா, வெய்ன்ஸ்டீன் ஒரு தொழில்  ரீதியாக பாலியல் வேட்டையாடுபவர் என்று கூறினார்

ஹார்வி வெய்ன்ஸ்டீனால் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் போது  வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை போன்று உணர்ந்ததாக நடிகை அன்னபெல்லா சியோரா கண்ணீர் மல்க கோர்ட்டில் கூறினார்.

வெய்ன்ஸ்டீன் பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையில் நியூயார்க்  கோர்ட்டில் உணர்ச்சிபூர்வமாக நடிகை அன்ன பெல்லா சியோரா சாட்சி அளித்தார். அப்போது அவர் கண்ணீர்  மல்க கூறியதாவது:-

1990 களின் முற்பகுதியில் தனது நியூயார்க் குடியிருப்பில் நுழைந்தார் . அப்போது நான் ஒரு நைட் கவுன் அணிந்திருந்தேன் அப்போது பாலியல் ரீதியாக அவர் என்னை தாக்கினார். நான் அவனை குத்தினேன், உதைத்தேன்.

அது மிகவும் அருவருப்பானது, என் உடல் மிகவும் அசாதாரணமான முறையில் நடுங்கத் தொடங்கியது. என்ன நடக்கிறது என்று கூட எனக்குத் தெரியவில்லை.

என் கைகளை தலைக்கு மேலே பிடித்து கொண்டு என்னைவிட 3 மடங்கு அதிகம் எடை உள்ள வெய்ன்ஸ்டீன்  என் மேல் வந்து  என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

அக்டோபர் 2017 இல் தி நியூயார்க்கர் பத்திரிகை இந்த செய்தியை வெளியிடும் வரை "எனது உயிருக்கு  ஆபத்து என பயந்ததால்" குற்றச்சாட்டுகளை  பகிரங்கமாக செல்லவில்லை என்று சியோரா கூறினார்.

67 வயதான ஹார்வி வெய்ன்ஸ்டீன் தன்மீதான  கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

Next Story