ஆப்கானிஸ்தானில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்தது: 83 பயணிகளின் கதி என்ன?


ஆப்கானிஸ்தானில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்தது: 83 பயணிகளின் கதி என்ன?
x
தினத்தந்தி 27 Jan 2020 11:00 AM GMT (Updated: 27 Jan 2020 9:07 PM GMT)

ஆப்கானிஸ்தானில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில், அதில் பயணம் செய்த 83 பயணிகளின் கதி என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஹெரட் மாகாணத்தின் தலைநகர் ஹெரட்டில் இருந்து காபூலுக்கு பயணிகள் விமானம் ஒன்று நேற்று காலை புறப்பட்டு சென்றது. விமானத்தில் 83 பயணிகள் இருந்தனர்.

இந்த விமானம் தலீபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கஜினி மாகாணத்தில் உள்ள டே யாக் மாவட்டத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது தரையில் விழுந்து திடீரென விபத்துக்குள்ளானது.

விமானத்தில் பயணம் செய்த 83 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. எனினும் அவர்கள் அனைவருமே உயிரிழந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

விமானம் விபத்துக்குள்ளான இடம் தலீபான்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்குமோ என்ற யூகங்களும் எழுந்துள்ளன.


Next Story