ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 19 பேர் பலி


ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 19 பேர் பலி
x
தினத்தந்தி 26 Feb 2020 3:13 PM GMT (Updated: 26 Feb 2020 3:13 PM GMT)

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 19 பேர் பலியாகி உள்ளனர்.

தெஹ்ரான்,

ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த நோயால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

இதனை தொடர்ந்து வைரஸ் பாதிக்கப்பட்ட 44 பேரில் கடந்த 24 மணிநேரத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை இன்று 19 ஆக உயர்ந்து உள்ளது.  வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நேற்று வரை 95 ஆக இருந்தது.  இதன் எண்ணிக்கை இன்று 139 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோன்று கொரோனா வைரசை ஒழிப்பதில் முன்னின்று பணியாற்றி வரும் துணை சுகாதார மந்திரி இராஜுக்கு நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

Next Story