கொரோனாவிற்கு அமெரிக்காவில் 22 லட்சம் பேரும், இங்கிலாந்தில் 5 லட்சம் பேரும் பலியாவார்கள் - தகவல்


கொரோனாவிற்கு அமெரிக்காவில் 22 லட்சம் பேரும், இங்கிலாந்தில் 5 லட்சம் பேரும் பலியாவார்கள் - தகவல்
x
தினத்தந்தி 18 March 2020 2:15 PM GMT (Updated: 18 March 2020 2:15 PM GMT)

கொரோனா வைரசுக்கு அமெரிக்காவில் 22 லட்சம் பேரும் இங்கிலாந்தில் 5 லட்சம் பேரும் பலியாவார்கள் என்று இங்கிலாந்து பேராசிரியர் தகவல் தெரிவித்துள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்தில் உள்ள லண்டன் இம்பிரியல் கல்லூரியின் கணித உயிரியல் பேராசிரியர் நீல்பெர்குசன் தலைமையிலான
குழுவினர் கொரோனா வைரஸ் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர். 

அவர்கள்  இத்தாலியில் இருந்து சேகரிக்கப்பட்ட புதிய மாதிரிகளை வைத்து சோதனை மேற்கொண்டனர். இதில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் அதிகம் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இந்த ஆய்வு முடிவில் 1918-ம் ஆண்டில் பேரழிவை ஏற்படுத்திய காய்ச்சலுடன் கொரோனா தொற்று நோயின் தாக்கத்தை ஒப்பிடும் போது எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பின், அமெரிக்காவில் 22 லட்சம் பேரும், இங்கிலாந்தில் 5 லட்சத்துக்கு மேற்பட்டோரும் உயிரிழப்பார்கள் என்று பேராசிரியர் நீல்கெர்குசன் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பேராசிரியர் அஸ்ராகானிக் கூறும்போது, “இது ஒரு சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது” என்றார்.

Next Story