இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் 40 ஆயிரம் பேர் உயிரிழக்கும் அபாயம்? சுகாதார நிபுணர் எச்சரிக்கை


இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் 40 ஆயிரம் பேர் உயிரிழக்கும் அபாயம்? சுகாதார நிபுணர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 April 2020 3:15 AM GMT (Updated: 18 April 2020 3:15 AM GMT)

இங்கிலாந்தில் கொரோனா முதல் அலையில் 40 ஆயிரம் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார நிபுணர் எச்சரித்து உள்ளார்.

லண்டன்

கொரோனா வைரஸ் காரணமாக இங்கிலாந்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 847 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது மருத்துவமனைகளில் மட்டும் என்பதால், பராமரிப்பு இல்லங்கள், முதியோர் காப்பகம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள இறப்புகளின் எண்ணிக்கையை சேர்த்தால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது.

இங்கிலாந்தின் முதியோர் இல்லங்களில் மட்டும் இதுவரை 1,400 பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது.ஆனால் 7500 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என ஒரு தகவல் தெரிவிக்கிறது.

அதுமட்டுமின்றி, நாட்டில் கொரோனா வைரஸிற்கான முதல் அலை முடிவதற்குள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 40,000-ஐ சந்திக்க நேரிடும் என்று முன்னணி பொது சுகாதார நிபுணர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களுடன் ஒப்பிடும் போது, இது குறைவு தான், நேற்று நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 861-ஆகவும், புதன் கிழமை 761-ஆகவும் இருந்தது. இதன் மூலம் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,576-ஆக உயர்ந்துள்ளது.

Next Story