ஆப்பிரிக்க கண்டத்தில் கொரோனா பாதிப்பு 120 கோடியை எட்டக்கூடும் -ஐ.நா எச்சரிக்கை


ஆப்பிரிக்க கண்டத்தில் கொரோனா பாதிப்பு 120 கோடியை எட்டக்கூடும் -ஐ.நா எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 April 2020 3:32 AM GMT (Updated: 18 April 2020 3:32 AM GMT)

தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆப்பிரிக்க கண்டம் செயல்படுத்தாவிட்டால் கொரோனா பாதிப்பு 120 கோடியை எட்டக்கூடும் என ஐ.நா ஆப்பிரிக்க பொருளாதார ஆணையம் எச்சரித்து உள்ளது.

கெய்ரோ

ஆப்பரிக்கா கண்டத்தில் முதல் கொரோனா பாதிப்பு பிப்ரவரி 14 அன்று எகிப்தில் பதிவாகியுள்ளது, அதன் பின்னர் 18,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

ஆப்பிரிக்க கண்டத்தில் கொரோனா பாதிப்பால் அதிக உயிரிழப்புகளை (348) சந்தித்துள்ள நாடு அல்ஜிரீயா தொடர்ந்து எகிப்து, மொராக்கோ, தென்னாப்பிரிக்கா உள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக ஆப்பிரிக்காவில் 300,000 முதல் 33 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று ஐ.நா. ஆப்பிரிக்காவின் பொருளாதார ஆணையம் (யுனெகா) தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆப்பிரிக்க கண்டம் செயல்படுத்தாவிட்டால், மொத்த நோய்த்தொற்றுகள் கட்டுப்பாட்டை மீறி 120 கோடியை எட்டக்கூடும்.

ஆனால் தீவிரமான சமூக தொலைதூர நடவடிக்கைகள் செயல்படுத்தினால் தொற்றுநோய் பாதிப்பின்   எண்ணிக்கை 12.2  கோடியாக  குறையக்கூடும் என  ஐ.நா. ஆப்பிரிக்காவின் பொருளாதார ஆணையம் கூறி உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பின்  அடுத்த மையமாக ஆப்பிரிக்கா மாறக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கடந்த வாரம் ஆப்பிரிக்க கண்டத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவு உயர்ந்து உள்ளது, இப்போது 18,000 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்புகள் மற்றும் கிட்டத்தட்ட 1,000 இறப்புகள் உள்ளன.

தற்போதைய விகிதம் ஐரோப்பிய நகரங்களுக்கும் நாடுகளுக்கும் மிகக் குறைவு, ஆனால் பாதிப்புகளில் விரைவான ஏற்றம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் ஆப்பிரிக்க தலைநகரங்களிலிருந்து பரவி வருவதாக உலகசுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

Next Story