மொசாம்பிக்கில் பயங்கரவாத இயக்கத்தில் சேர மறுத்த 52 பேர் கொன்று குவிப்பு


மொசாம்பிக்கில் பயங்கரவாத இயக்கத்தில் சேர மறுத்த 52 பேர் கொன்று குவிப்பு
x
தினத்தந்தி 23 April 2020 12:20 AM GMT (Updated: 23 April 2020 12:20 AM GMT)

மொசாம்பிக்கில் பயங்கரவாத இயக்கத்தில் சேர மறுப்பு தெரிவித்த 52 பேரின் தலையை துண்டித்து பயங்கரவாதிகள் கொலை செய்தனர்.

மாபுடோ, 

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாத இயக்கம் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அல் ஷபாப் பயங்கரவாதிகள், போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த நாட்டின் கபோ டெல்கடோ மாகாணத்தில் உள்ள சில கிராமங்களை பயங்கரவாதிகள் அண்மையில் ஆக்கிரமித்தனர். அதன் பிறகு அவர்கள் அந்த கிராமங்களில் இருக்கும் மக்களை தங்களின் பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பெரும்பாலானோர் பயங்கரவாதிகளின் மிரட்டலுக்கு பயந்து, அவர்களது இயக்கத்தில் சேர்ந்து விட்டனர். 

அதே சமயம் பலர் பயங்கரவாத இயக்கத்தில் சேர மறுத்துவிட்டனர். அப்படி மறுப்பு தெரிவித்த 52 பேரின் தலையை துண்டித்து பயங்கரவாதிகள் கொலை செய்தனர்.

Next Story