ரஷ்யாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.9 ஆக பதிவு


ரஷ்யாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.9 ஆக பதிவு
x
தினத்தந்தி 23 April 2020 1:21 AM GMT (Updated: 23 April 2020 1:21 AM GMT)

ரஷ்யாவின் கிழக்கு கடலோர பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

காம்சட்ஸ்கை,

ரஷ்யாவின் கிழக்கு கடலோர பகுதியில் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சட்ஸ்கை நகருக்கு தென்கிழக்கே 177 கி.மீட்டர்கள் தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கம் 44 கி.மீட்டர்கள் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  ரிக்டரில் 4.9 ஆக பதிவாகி உள்ளது.  எனினும், இந்த நிலநடுக்கத்தினை உள்ளூர்வாசிகள் யாரும் உணரவில்லை.  இதனால் யாருக்கும் காயமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை.  சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

Next Story