உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு உயிர் இழப்புகள் அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்க கூடும்


உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு உயிர் இழப்புகள் அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்க கூடும்
x
தினத்தந்தி 23 April 2020 3:46 AM GMT (Updated: 23 April 2020 12:01 PM GMT)

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு உயிர் இழப்புகள் அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்க கூடும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நியூயார்க்

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் நோய் (கோவிட் -19) தொற்றுநோயால் தற்போது ஏற்பட்டு உள்ள உயிர் இழப்பை விட பல்லாயிரக்கணக்கான அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்ககூடும் என்று நியூயார்க் டைம்ஸ் மற்றும் பைனான்சியல் டைம்ஸ் ஆகியவை தெரிவித்துள்ளன.

இங்கிலாந்தைப் பொறுத்தவரையில், காணாமல் போன மொத்த கொரோனா இறப்புகள் உண்மையான எண்ணிக்கையை விட இரு மடங்காக இருக்கலாம் என்று எஃப்டி தெரிவித்துள்ளது, இது ஏப்ரல் 10 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 75 சதவீத இறப்புகளைக் காட்டும் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களை மேற்கோளிட்டுள்ளது. அதிகாரபூர்வ அற்க்கையில் கொரோனா  இறப்பு எண்ணிக்கை 17,000 க்கும் அதிகமானதாகக் கருதப்பட்ட ஒரு நாளில், 41,000 பேர் இறந்தனர் என்று பைனான்சியல் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது.

இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உட்பட 11 நாடுகளில் இருந்து அனைத்து காரண இறப்பு புள்ளிவிவரங்களின் பகுப்பாய்வு, அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொள்ளப்பட்டதை விட கடந்த மாதத்தில் 25,000 இறப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்று நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

"கடந்த மாதத்தில், முந்தைய ஆண்டுகளை விட இந்த நாடுகளில் அதிகமான மக்கள் இறப்புகள் நிகழ்ந்துள்ளன என  நியூயார்க் டைம்ஸ் கண்டறிந்துள்ளது. மொத்தத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பிற காரணங்களால் ஏற்பட்ட இறப்புகளும் அடங்கும், மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகமாகிவிட்டதால் சிகிச்சையளிக்க முடியாத நபர்கள் உட்பட, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த இறப்பு எண்ணிக்கை தொற்றுநோயின் முழுமையான பாதிப்பை உணர்த்துகின்றன.பெரும்பாலான நாடுகள் மருத்துவமனைகளில் நிகழும் கொரோனா பாதிப்பு இறப்புகளை மட்டுமே தெரிவிக்கின்றன என அதன் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story