உலக செய்திகள்

இலங்கையில் கொரோனா ஆபத்து அதிகம் உள்ள இடங்களில் ஊரடங்கு நீட்டிப்பு + "||" + Covid-19: Sri Lanka extends curfew in high risk districts till May 4

இலங்கையில் கொரோனா ஆபத்து அதிகம் உள்ள இடங்களில் ஊரடங்கு நீட்டிப்பு

இலங்கையில் கொரோனா ஆபத்து அதிகம் உள்ள இடங்களில் ஊரடங்கு நீட்டிப்பு
இலங்கையில் கொரோனா ஆபத்து அதிகம் உள்ள 4 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு,

இலங்கையிலும் கொரோனா பாதிப்பு காணப்படுகிறது. இலங்கையில் தற்போதைய நிலவரப்படி 440 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பரவலைக்கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படும் அபாயம் உள்ள 4 மாவட்டங்களில் ஊரடங்கு மே 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.  இலங்கையில் நேற்று  ஒருநாளில் மட்டும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,  இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஊரடங்கை நீட்டிக்கும் முடிவை எடுத்ததாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இலங்கையில் உள்ள 25 நிர்வாக மாவட்டங்களில்,  கொழும்பு, கம்பா, கலுதரா, புட்டாளம் ஆகிய  ஆகிய 4 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படும் அபாயம் உள்ள மாவடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.  ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு வரும் 27 ஆம் தேதி பகுதியளவு தளர்த்தப்பட உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் முழு ஊரடங்கு கடைபிடிப்பு:வாகனங்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடின
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை பெங்களூருவில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
2. சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் 25 பேர் உயிரிழப்பு
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
3. தாராவியில் கட்டுக்குள் வந்த கொரோனா! அதிகாரிகள், மக்களுக்கு ராகுல் காந்தி பாராட்டு
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
4. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.28 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.28 கோடியாக உயர்ந்துள்ளது.
5. அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று :”விரைவில் நலம் பெறுங்கள்” ரசிகர்கள் பிரார்த்தனை
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப்பச்சன் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.