உலக செய்திகள்

ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது + "||" + The number of people infected with coronavirus in Iran has crossed 1 lakh

ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது

ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது
ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1 லட்சத்தை கடந்துள்ளது.
தெஹ்ரான்,

உலக முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 37,78,012 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,61,243 பேர் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து 12,75,321 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1 லட்சத்தை கடந்துள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,680 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,01,650 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 78 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்னிக்கை 6,418 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 81,587 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கூடிய புதிய நாடாளுமன்றம்
ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் புதிய நாடாளுமன்றம் நேற்று கூடியது.
2. மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒரே நாளில் 105 பேர் பலி
மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்று ஒரே நாளில் 105 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 2,190 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கவுரவக்கொலை: தூங்கிக்கொண்டிருந்த மகளின் தலையை துண்டித்து கொலை செய்த தந்தை
ஈரானில் தந்தை ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த மகளின் தலையை துண்டித்து கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
4. பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 674 பேர் பலி
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 674 பேர் பலியாகி உள்ளனர்.
5. ஈரானில் ஒரே நாளில் 2,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஈரானில் இன்று ஒரே நாளில் 2,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.