உலக செய்திகள்

சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா- அறிகுறிகள் இல்லாமல் 28 பேருக்கு புதிதாக தொற்று + "||" + China reports 28 new asymptomatic coronavirus cases

சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா- அறிகுறிகள் இல்லாமல் 28 பேருக்கு புதிதாக தொற்று

சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா- அறிகுறிகள் இல்லாமல் 28 பேருக்கு புதிதாக தொற்று
சீனாவில் அறிகுறிகள் எதுவும் இன்றி புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெய்ஜிங்,

உலகம் முழுவதும் உக்கிர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ், முதன் முதலாக சீனாவின் உகான் நகரில்தான் வெளிப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா பரவலைக் கண்டறிந்த சீனா, கடுமையான நடவடிக்கைகளால் வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

எனினும், அறிகுறிகள் இல்லாமல் கொரோனா பரவுவது சீனாவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. முதன் முதலாக கொரோனா பரவிய உகான் நகரம் அமைந்துள்ள ஹூபெய் மாகாணம் முழுவதும் உள்ள சுமார் 11 கோடி மக்களிடம்  கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சீனா திட்டமிட்டு, அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. இந்த சூழலில், கடந்த சில தினங்களாக அறிகுறிகள் இல்லாமல் கொரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. 

எனினும், புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் யாரும் சீனாவில் இருந்தவர்கள் இல்லை எனவும் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் எனவும் சீன சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது. ஹூபெய் மாகாணத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் அறிகுறிகள் எதுவும் இல்லாதவர்கள் என்று சீனா சுகாதாரத்துறை தெரிவித்தது.  ஹூபெய் மாகாணத்தில் மொத்தம் 295 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி, சீனாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 82,971 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் 4,634- பேர் பலியாகியுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் புதிய உச்சம்; கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 24,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. அமெரிக்காவில் ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.21 கோடியாக அதிகரிப்பு
உலக அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.21 கோடியாக உயர்ந்துள்ளது.
4. மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்துக்கு 42 ஆயிரத்தை கடந்துள்ளது.