ரெனால்ட் நிறுவனம் 20 ஆயிரம் பேரை நீக்க முடிவு


ரெனால்ட் நிறுவனம் 20 ஆயிரம் பேரை நீக்க முடிவு
x
தினத்தந்தி 23 May 2020 6:08 PM GMT (Updated: 23 May 2020 6:08 PM GMT)

ரெனால்ட் நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் இருந்து 20 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

ரோம்,

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த நிலையில் உலக அளவில் பொருளாதாரம் சரிவடைந்து உள்ளது. இதன் காரணமாக பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர்.

அந்த வகையில் ரெனால்ட் நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் இருந்து 20 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பணி நீக்கத்தை கைவிட்டால் உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் பிரான்சில் உள்ள 12 ஆலைகளை மார்ச் மாதத்தில் இருந்து மூடிய நிலையில்,விற்பனையிலும் தேக்கம்  ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளதால், பிரான்ஸ் அரசு உதவி செய்வதாக அறிவித்துள்ளது. உதவியை ஏற்பது குறித்து முடிவு செய்யவில்லை என ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story