கொடூரமான காட்டுத்தீயால் பற்றி எரியும் சைபீரிய காடுகள் உருகும் பனிப்பாறைகள்


கொடூரமான காட்டுத்தீயால் பற்றி எரியும் சைபீரிய காடுகள் உருகும் பனிப்பாறைகள்
x
தினத்தந்தி 28 May 2020 11:27 AM GMT (Updated: 28 May 2020 3:47 PM GMT)

கொடூரமான காட்டுத்தீயால் சைபீரிய காடுகள் பற்றி எரிகின்றன இதனால் பனிப்பாறைகள் உருகுகின்றன.

சைபீரியா

ஆர்க்டிக் துருவத்திற்கு வடக்கே அமைந்துள்ள சைபீரியாவின் கட்டங்காபகுதியில் அதிகபட்சமாக 78 டிகிரி வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 46 டிகிரி அதிகம். அதேபோல கட்டங்காவில் ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி ஆகும்.

மே மாதத்தில் சைபீரியாவில் வெப்பமான வானிலை நிலவுவது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல, ஏனெனில் இது குளிர்காலத்திற்கு பிறகு இங்கு வானிலை இப்படி ஒரு நிலையான அம்சமாக மாறியுள்ளது. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் தற்போது நிலவும் சராசரி வெப்பநிலை மாற்றமானது,  2020 ஆம் ஆண்டில் உலகளாவிய சராசரி வெப்பநிலையை அதிகமாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும்.

சைபீரியாவில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை அதிகரிப்பு ஆர்க்டிக் சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஏற்கெனவே சில விளைவுகளைக் காட்டத் தொடங்கி விட்டது. மிக பெரிய சைபீரிய காடுகளில் தீ பற்றி எரிகிறது. இதனால் இந்த ஆண்டு, எதிர்பார்த்ததை விட விரைவாகவே பனி உருகி விடும்.

சமீபத்திய ஆண்டுகளில், விஞ்ஞானிகள் ஆர்க்டிக் பரப்பின்  பனிப்பாறைகளுக்கு கீழே  உள்ள மண்ணின்  ஸ்திரத்தன்மை குறித்து கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டில், சைபீரியா ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கு பகுதியில் கோடை காலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயால், சுமார் 30 லட்சம்  ஹெக்டேர்கள் எரிந்து விட்டன. இப்பகுதியின் சில பகுதிகளில் ஏற்படும் அசாதாரணமான தீ விபத்துக்களை புரிந்துகொள்வது விஞ்ஞானிகளுக்கு சிக்கலாகவும் கடினமாகவும்  உள்ளது.

சில ஆராய்ச்சியாளர்கள் இந்த தீ "ஜோம்பி தீ" என்று அழைக்கிறார்கள், அதாவது "கொடூரமான காட்டுத்தீ" என்று கூறுகின்றனர். இந்த கடுமையான  தீ, சைபீரிய குளிர்காலத்தில் ஒரு பனி படலத்தின், அதாவது ஸ்னோபேக்கின் கீழ் புதைவதிலிருந்து தப்பிக்க முடியும். இதை சில விஞ்ஞானிகள் ஸ்னோபேக் ஒரு இன்சுலேட்டராக, அதாவது பாதுகாப்பு உறையாக செயல்படுகிறது என்று சிலர்  கூறுகின்றனர். 

ஆர்க்டிக் காலநிலை மாற்றத்தை ஆராய்ச்சி செய்யும் இர்வின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவர் ஜேக் லேப், சைபீரியாவின் முன்னேற்றங்கள் அசாதாரணமானது என்று வாஷிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்தார்.


Next Story