உலகமெங்கும் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.64 லட்சத்தை கடந்தது


உலகமெங்கும் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.64 லட்சத்தை கடந்தது
x
தினத்தந்தி 29 May 2020 6:44 PM GMT (Updated: 29 May 2020 6:44 PM GMT)

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.64 லட்சத்தை கடந்துள்ளது.

வாஷிங்டன், 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோர தண்டவம் ஆடும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

இந்நிலையில் உலகமெங்கும் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 3,64,408 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,03,839 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் இங்கிலாந்தில் 38,161 பேரும், இத்தாலியில் 33,229 பேரும், பிரான்சில் 28,714 பேரும், ஸ்பெயினில் 27,121 பேரும், பிரேசிலில் 26,899 பேரும் பலியாகி உள்ளனர்

Next Story