அக்டோபரில் அமெரிக்காவில் கொரோனா இறப்புகள் 1.8 லட்சத்தை நெருங்கும் நிபுணர்கள் கணிப்பு


அக்டோபரில் அமெரிக்காவில் கொரோனா இறப்புகள் 1.8 லட்சத்தை நெருங்கும் நிபுணர்கள் கணிப்பு
x
தினத்தந்தி 25 Jun 2020 9:22 AM GMT (Updated: 25 Jun 2020 9:22 AM GMT)

அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் 179,106 கொரோனா இறப்புகள் ஏற்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

வாஷிங்டன்

அமெரிக்கா முழுவதும் 23.8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் குறைந்தது 121,969 பேர் இறந்துவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளது. உலகின் மொத்த நோய்த்தொற்றுகள் மற்றும் மொத்த உலகளாவிய இறப்புகளில் நான்கில் ஒரு பங்கு அமெரிக்காவில் உள்ளது.

அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் 179,106 கொரோனா இறப்புகள் ஏற்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆனால் முககவசம் 33,000 உயிர்களைக் காப்பாற்றும் என கூறி உள்ளனர்.

வாஷிங்டன் பல்கலைக்கழக சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் நேற்று ஒரு கணிப்பை வெளியிட்டு உள்ளது. அதில் நாடு முழுவதும் 159,497 முதல் 213,715 கொரோனா இறப்புகள் ஏற்படும் என கூறி உள்ளது.

இருப்பினும், நிறுவன இயக்குனர் டாக்டர் கிறிஸ் முர்ரே, முககவசம் அணிவது தொற்றுநோயை குறைக்கும் என்று கூறி உள்ளார்.

ஜூலை 18 க்குள் 130,000 முதல் 150,000 அமெரிக்கர்கள் வரை கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்துவிடுவார்கள் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் சமீபத்திய கணிப்பு தெரிவித்துள்ளன.

ஜூன் 18 அன்று, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்  கணிப்பு ஜூலை 11 க்குள் 135,000 இறப்புகளை கணித்து இருந்தது அது தற்போது அதிகரித்து உள்ளது.

Next Story